மேலும் செய்திகள்
ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி
27-Apr-2025
இரு பைக்குகள் மோதல்: ஒருவர் பலி
24-Apr-2025
உளுந்துார்பேட்டை : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்,55; இவரது மனைவி குப்பு, 50; வாத்து மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இவரது வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த மகள் வழி பேரன் விஜி மகன் ருத்தீஸ்வரன், 4; திருக்கோவிலுார் தாலுகா, வடக்கு நெமிலியை சேர்ந்த குப்புவின் தம்பி ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமி,11; ஆகியோர் வந்தனர். சமீபகாலமாக, குப்பு கூவாகம் கிராமத்தில் தங்கி வாத்துகளை மேய்த்து வந்தார். அவருடன் இந்த இரு சிறார்களும் தங்கி இருந்தனர். நேற்று மதியம் 1:30 மணிக்கு, அங்குள்ள ஏரிக்கரையோரம், குப்பு வாத்துக்களை மேய்த்துக் கொண்டிருந்தார்.ஜெயலட்சுமி, ருத்தீஸ்வரன் ஆகிய இருவரும் அந்த ஏரியில் குளித்த போது, எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப் பார்த்து குப்பு சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, இருவரையும் மீட்டு திருவெண்ணெய்நல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Apr-2025
24-Apr-2025