கள்ளக்குறிச்சியில் பிராமணர் சங்க மாவட்ட கிளை கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட கிளை கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். சத்தியமூர்த்தி வரவேற்றார்.கூட்டத்தில் அனைத்து ஹிந்து கோவில்களிலும் இரண்டு கால பூஜைகள் தடையின்றி நடத்திட வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை முழுமையாக அளந்து அதன்மூலம் நிரந்தர வருவாய் ஏற்படுத்தி அனைத்து கோவில்களிலும் அனுதின பூஜைகள் தடையின்றி நடத்திட அரசுக்கு கோரிக்கை விடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கிளையின் 2025-30ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட கவுரவ தலைவர் துரைசாமி, துணை தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராஜு, மகளிரணி செயலாளர் சரஸ்வதி, இளைஞரணி செயலாளர் சீனுவாசன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபாலன், கிருஷ்ணன்பட், பிச்சுமணி, கிருஷ்ணகுமார், மணிகண்டன், சீனுவாசன், கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி, சிவக்குமார், ஜெயக்குமார், வெங்கட்ராமன், வெங்கடேசன், சட்ட ஆலோசகர்கள் ராஜேந்திரன், ரங்கராஜன், ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சுந்தர்பாபு நன்றி கூறினார்.