காலை உணவு திட்டம் : கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 725 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.அதில் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவுகள் விவரம், சுகாதாரமாகவும் தொடர்ந்து தயாரித்து வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். காலை உணவு திட்டத்தை அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து தரமான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.