உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தம்பியை தாக்கிய அண்ணன் கைது

தம்பியை தாக்கிய அண்ணன் கைது

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 58; இவரது அண்ணன் கூத்தையன், 59; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், கூத்தையன் தரப்பினர், ஏழுமலையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.ஏழுமலை அளித்த புகாரின் பேரில், கூத்தையன், இவரது மனைவி செல்வி ஆகிய இருவர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து கூத்தையனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ