மேலும் செய்திகள்
கடலுார், விருதையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
22-Nov-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் 'பில்ட் எக்ஸ்போ' நேற்று துவங்கியது.கண்காட்சியை கலெக்டர் பிரசாந்த் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, மாவட்டத்தில் இளம் சிவில் இன்ஜினியர்களை பொறியாளர் சங்கத்தினர் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் மாவட்டத்தில் அதிகளவு அரசு பதிவு பெற்ற கட்டட பொறியாளர் களை உருவாக்குவது மிக முக்கியம் எனக் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். செயலாளர்கள் அருண்குமார், ரவி, பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இணை சேர்மன் நக்கீரன் வரவேற்றார்.உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிகண்ணன், தமிழ்நாடு - புதுச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் விஜயபானு, கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் பாஸ்கரன், வேணுகோபால், அசோகன், கள்ளக் குறிச்சி பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் ஹேமா, நகராட்சி ஆணையர் சரவணன், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு, 'பில்ட் எக்ஸ் போ'வில் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டனர். 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியை இணை சேர்மன்கள் ரவி, சந்திரசேகரன், கலைமணி, கண்ணன், கணேசன், சரவணன், சுரேந்திரன், ஷபி முகமது, இப்ராஹீம், முகமதுஹசேன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இணை சேர்மன் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
22-Nov-2024