கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.34.42 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 34.42 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கமிட்டிக்கு, எள் 250 மூட்டை, மக்காச்சோளம் 180, உளுந்து 45, ராகி 25, கம்பு 10, வேர்க்கடலை 5, துவரை, தட்டைப் பயறு தலா ஒரு மூட்டை என 517 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை எள் 12,874 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,386, உளுந்து 7,229, ராகி 3,769, கம்பு 2701, வேர்க்கடலை 9143, துவரை 5,409, தட்டைப் பயிறு 7,009 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 34 லட்சத்து 42 ஆயிரத்து 939 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம்
மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 20 மூட்டை, எள் 3, ஒரு மூட்டை பனகாலி, விரலி 5, குண்டு 5, உட்பட மஞ்சள் 11 மூட்டை மஞ்சள் என மொத்தம் 34 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,386, எள் 11,756, பனகாலி மஞ்சள் 25,500 விரலி 15,500, குண்டு 13,009 ரூபாய்க்கும் என மொத்தமாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 651 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம்
மார்க்கெட் கமிட்டியில் கம்பு 55 மூட்டை, உளுந்து 36, நெல் 31, எள் 7 மூட்டை என மொத்தம் 129 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக கம்பு 3,629, உளுந்து 7,229, நெல் 2,009, எள் 9,789 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 13 லட்சத்து 6 ஆயிரத்து 980க்கு வர்த்தகம் நடந்தது.