மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் சி.சி.டி.வி., திருட்டு
04-Jan-2025
கச்சிராயபாளையம்; கோமுகி அணை அரசு பள்ளி விடுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை பகுதியில் அரசு பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராக்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Jan-2025