உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது அருந்திய 8 பேர் மீது வழக்கு

மது அருந்திய 8 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தினமும் நடைபெறும் வாகன விபத்து, அடிதடி தகராறு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். அப்போது, பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் 3 நபர்கள், கள்ளக்குறிச்சி 3, வரஞ்சரம் 2 என, மொத்தமாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ