மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி கொளஞ்சியம்மாள்,45; இவரது மகள் மகாலட்சுமி, மாத்துார் முனுசாமி மகன் மணிகண்டன், 28. இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்து விட்டு, மகாலட்சுமியை திட்டி தாக்கினார். கடந்த ஒரு மாதத்திற்கு முன், மகாலட்சுமி கோபித்துக் கொண்டு, தென்கீரனுாரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மகாலட்சுமியை அழைத்து செல்ல வந்த மணிகண்டன், தகராறு செய்து, கொளஞ்சியம்மாளை திட்டி செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். தடுக்க வந்த மாமனார் மகாலிங்கம், மனைவி மகலாட்சுமியை தாக்கினார். படுகாயமடைந்த கொளஞ்சியம்மாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் மணிகண்டன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.