மேலும் செய்திகள்
சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு
23-Dec-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வாகன விபத்து, அடிதடி தகராறு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.அப்போது, பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் 4 நபர்கள், வரஞ்சரம், கள்ளக்குறிச்சி, கரியலுார், கீழ்குப்பம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா இருவர், கச்சிராயபாளையம் மற்றும் சின்னசேலம் ஸ்டேஷன்களில் தலா 3 பேர் என மொத்தமாக 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
23-Dec-2024