மேலும் செய்திகள்
பைக் திருட்டு
28-Jun-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இளம்பெண்ணை தாக்கிய, 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் மகள் பூஜா, 26; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு வடக்குநெமிலியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கன்னிகுமரன் வீட்டிற்கு சென்று, கடன் தொகையை கேட்டார். அப்போது கன்னிகுமரன் அவரை திட்டி தாக்கினார். இதையடுத்து பூஜா அங்கிருந்து புறப்பட்டு, தனது அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த கன்னிகுமரன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து, பூஜாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், அந்த இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Jun-2025