உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடனை கேட்டு மிரட்டல் : 2 பெண்கள் மீது வழக்கு

கடனை கேட்டு மிரட்டல் : 2 பெண்கள் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே கடனை திருப்பி கேட்டு மிரட்டியதாக பெண் அளித்த புகாரில் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த கூட்டடி பகுதியை சேர்ந்தவர் தரணிராஜ் மனைவி சுமித்ரா, 23; இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2023ம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அதற்காக 8 மாதம் மட்டுமே தவணை தொகை கட்டியுள்ளார். மீதி தவணைத் தொகை செலுத்தவில்லை. நேற்று முன்தினம் தனியார் நிதி நிறுவன ஊழியர் உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா பகுதியைச் சேர்ந்த ஜாவிது உசேன் மனைவி ரூபினா, 35; கடன் வாங்கி கொடுத்த கூட்டடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மனைவி சரஸ்வதி, 35; ஆகியோர் சென்று சுமித்ராவிடம் கடன் தொகை கேட்டனர். இதனால் சுமித்ரா வீட்டிலிருந்த எறும்பு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் ரூபினா, சரஸ்வதி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசா ரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ