உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு

நெற்பயிர்கள் சேதம் 3 பேர் மீது வழக்கு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த அத்தியூர், அண்ணா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகம், 45; இவரது நிலத்தில் வைத்திருந்த கரும்பு பயிரை, தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி இந்துமதி, 46; சேதப்படுத்தினார். இது தொடர்பாக, அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 1ம் தேதி, இந்துமதி, அவரது ஆதரவாளர்கள் பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோகர், கடுவனுார் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் சண்முகம் நிலத்தில் வைத்திருந்த நெற்பயிரை சேதப்படுத்தி, அவரது மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, வடபொன்பரப்பி போலீசார் இந்துமதி, மனோகர், விஜயராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை