உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராவல் திருடிய 3 பேர் மீது வழக்கு ஜே.சி.பி., டிராக்டர், டிப்பர்கள் பறிமுதல்

கிராவல் திருடிய 3 பேர் மீது வழக்கு ஜே.சி.பி., டிராக்டர், டிப்பர்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: வாணவரெட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் திருடியது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிந்து, ஜே.சி.பி., மற்றும் டிராக்டர், டிப்பர்களை பறிமுதல் செய்தனர்.வரஞ்சரம் அடுத்த வாணவரெட்டி கிராமத்தில், ஓடை புறம்போக்கு நிலத்தில், கிராவல் மண் திருடுவதாக, வருவாய்த்துறைக்கு புகார் சென்றது. வாணவரெட்டி கிராம நிர்வாக அதிகாரி உஷா மற்றும் வரஞ்சரம் போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.அங்கு, அரசு அனுமதியின்றி 3 டிராக்டர் டிப்பர்களில் கிராவல் மண் திருடியது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கல்வராயன், அரியபுத்திரன் மகன் அசோக்குமார், மணிகண்டன் மகன் சிலம்பரசன் ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., மற்றும் 3 டிராக்டர், டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ