உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன், 28; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சுகந்தி. இவர், தன்னை வீட்டில் சேர்த்து கொள்ளாதது குறித்து தனது குடும்பத்தினரிடம் கேட்குமாறு ராமனிடம் தெரிவித்துள்ளார். இதனால், கடந்த 15ம் தேதி சுகந்திக்கு ஆதரவாக ராமன், சுகந்தியின் கணவர் பிரபாகரனிடம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈஸ்வரி, ஆனந்தன், பிரியா ஆகியோர் ராமனை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை