மேலும் செய்திகள்
சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு
30-May-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பரமேஸ்வரி, 33; இவரது குடும்பத்துக்கு சொந்தமான நிலம், கோளப்பாறை கிராம எல்லையில் உள்ளது. அந்த இடத்தை அளக்கும் போது, அங்கு வந்த பரமேஸ்வரியின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி, 48; அருண், 28; ஏழுமலை, 45; ஜெகதீஷ்,19; ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-May-2025