உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ரிஷிவந்தியம் :இளையனார்குப்பத்தில் முன்விரோதம் தொடர்பாக தம்பதியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் ஏழுமலை. இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 1ம் தேதி கோவிந்தம்மாள் குடும்பத்தினர் விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு வந்த ஏழுமலை தரப்பினர், அண்ணாதுரை மற்றும் கோவிந்தம்மாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், கரும்பு, நெற்பயிர்களை சேதப்படுத்தினர்.இது தொடர்பாக கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில், சாமிகண்ணு மகன் ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபு, நாராயணசாமி மகன் அன்பு, ரவி ஆகிய 4 பேர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ