உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டை உடைத்து சேதம் 5 பேர் மீது வழக்கு

வீட்டை உடைத்து சேதம் 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தானை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கிேஷாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கிேஷார் அவரது உறவினர்கள் சின்னபையன், ராஜவேல், அருண், உதயகுமார் ஆகியோர் செந்தில்குமாரின் வீட்டின் கதவு, ஜன்னல், கழிவறை கதவு உள்ளிட்டவற்றை கடப்பாறை மற்றும் கத்தியால் சேதப்படுத்தி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார், கிேஷார் உள்ளிட்ட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ