மேலும் செய்திகள்
சாராய ஊரல் அழிப்பு
24-Aug-2025
கள்ளக்குறிச்சி: கரியாலுார் அருகே விளைநிலத்தில் சாராயம் இருந்து தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதுவிலக்கு சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டிவளவு கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரின் விளை நிலத்தில் லாரி டியூப்பில் 30 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்து, பட்டிவளவு கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் மாதேஷ், மூக்கன் மகன் சங்கர் (எ) ஜெயசங்கர், சின்னையன் மகன் கோவிந்தராஜ், மாதேஷ் மகன் வசந்த், ஜெயசங்கர் மனைவி தமிழ்செல்வி ஆகிய 5 பேர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
24-Aug-2025