உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமி திருமணம் விவகாரத்தில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தன்,20; இவர் கடந்த ஏப்ரல் மாதம், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த கோவிந்தன்,20; அவரது தந்தை பெருமாள், தாய் அய்யம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை சின்னதுரை, தாய் லட்சுமி ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ