முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமார்,42; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வீரபத்திரன் மகன் எழுமலை,43; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சபுத்துார் சாவடி அருகே எழுமலை பொங்கல் விளையாட்டு போட்டிக்கு மேடை அமைத்து ரோட்டின் குறுக்கே இரும்பு பைப் போட்டு தடை செய்திருந்தார். அதனை செந்தில்குமார் தட்டிக் கேட்க இருதரப்பினருக்கிடை மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் செந்தில்குமாரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு மயிலாம்பாளையம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று கலைந்து சென்றனர்.இந்நிலையில் மோதல் தொடர்பாக செந்தில்குமார் புகாரின் பேரில் ஏழுமலை, மணிகண்டன், கண்ணன், விஜயகாந்த், அன்பழகன் ஆகியோர் மீதும், ஏழுமலை புகாரின் பேரில், செந்தில்குமார்,ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.