உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் சிறுவன் பலி தந்தை, மகன் மீது வழக்கு

விபத்தில் சிறுவன் பலி தந்தை, மகன் மீது வழக்கு

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் பைக் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், பைக் ஓட்டிய 17 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை சேர்ந்தவர் பாபு மகன் விஷ்ணு, 15; அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி பொதுத்தேர்வு எழுதி முடித்த பிறகு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிர்திசையில் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பல்சர் பைக், விஷ்ணு மீது மோதியது.விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விஷ்ணு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.இது தொடர்பாக, பைக் ஓட்டிய 17 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை ஆகிய இருவர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி