மேலும் செய்திகள்
உண்டியலை உடைத்து திருடிய போதை ஆசாமி சிக்கினார்
11-Jun-2025
ரிஷிவந்தியம் : பழையசிறுவங்கூரில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராமச்சந்திரன், 36; இவர், கடந்த 28ம் தேதி இரவு வீட்டின் முன் அவரது ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் காலை பார்த்த போது பைக் திருடு போனது தெரியவந்தது.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சித்தால் கிராமத்தில் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடிய வழக்கில், தியாகதுருகம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வெங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் சண்முக வெற்றிவேல், 20; பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பகண்டைகூட்ரோடு போலீசார் சண்முக வெற்றிவேல் மீது வழக்கு பதிந்து, அவரிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.
11-Jun-2025