உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய  4 பேர் மீது வழக்கு பதிவு

பெண்ணை தாக்கிய  4 பேர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளத்தை சேர்ந்த வாணழகன் மனைவி ஜோதி, 26; கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு சோமண்டார்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்கு சென்றார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பிரபு, பாண்டியன், பழனி ஆகியோர் ஜோதி மற்றும் அவரது தாயை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி