உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலாபன் வரவேற்றார்.மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,553 இடங்களில் ஒன்று முதல் 49 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரத்து 764 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட அனைவருக்கும் வரும் 17ம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். ஒன்று முதல் 2 வயது குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையும், 20 முதல் 30 வயது வரை பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'மாணவர்களின் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் எடை இருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.காலணி அணியாமல் நடந்தால் நோய்த்தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இந்த மாத்திரை சாப்பிடுவதன் மூலம் உடல் பாதுகாப்பாக இருப்பதுடன், ரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி