உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'செஸ்' போட்டிகள் நடத்துவது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதேபோல் சதுரங்க போட்டியும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில், வரும் ஜூலை 2ம் தேதி 11, 14,17, 19 வயதிற்குட்பட்ட நான்கு பிரிவுகளில் பள்ளி அளவில் (செஸ்) போட்டிகள் நடக்க உள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறுவர்.தொடர்ந்து வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர். இந்நிலையில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சதுரங்க போட்டிகளை சிறப்பாக நடத்தவும், மேற்பார்வையிடும் ஒரு நாள் சதுரங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட சதுரங்க சங்க செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை