திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் 9 அடி உயர வெண்கல கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மணலுார்பேட்டையில் வெண்கலத்தால் 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி சிலையை திறந்து வைத்து, அருகில் வைக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வழி நெடுகிலும் குவிந்திருந்த பொதுமக்களிடம் நடந்து சென்று கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் வேலுச்சாமி, மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ், பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், துணைத் தலைவர் தம்பிதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அஞ்சலாட்சி அரசகுமார், வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணை சேர்மன்கள் சென்னம்மாள் அண்ணாதுரை, தனம் சக்திவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், பாரதிதாசன், பெருமாள், துரைமுருகன், அசோக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அம்மு ரவிச்சந்திரன், இளைஞனின் துணை அமைப்பாளர் பாலாஜிபூபதி, ஊராட்சித் தலைவர்கள் கோமதி சுரேஷ், கிருஷ்ண பிரசாத், ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.