கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில்மகேஷ், கணேசன் ஆகியோர் வந்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு தியாகதுருகம் அடுத்த திம்மலை பஸ் நிறுத்தம் மற்றும் ஏமப்பேர் ரவுண்டானா ஆகிய இடங்களில் தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேனில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று தொண்டர்களுடன் கை குளுக்கினார். நிகழ்ச்சியில் மலையரசன் எம்.பி., மணிகண்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணை சேர்மன் தங்கம் செயற்குழு, மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், முருகன், தொழிலதிபர் செந்தில்குமார், நகர செயலாளர்கள் சுப்ராயலு, துரை, நகர சேர்மன்கள் முருகன், திருநாவுக்கரசு, டேனியல்ராஜ், துணை சேர்மன்கள் ஷமீம்பானு அப்துல்ரசாக், வைத்தியநாதன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், கதிரவன், செல்வம், பன்னீர்செல்வம், வசந்தவேல் பங்கேற்றனர். மேலும், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன், திலகவதி நாகராஜன், சந்திரன், ராஜவேல், சாந்தி இளங்கோவன், துணை சேர்மன்கள் விமலாமுருகன், பாட்சாபீ ஜாகீர்உசேன், அலெக்சாண்டர், ராமலிங்கம், பேரூராட்சி சேர்மன்கள் வீராசாமி, ரோஜாரமணி தாகப்பிள்ளை, துணை சேர்மன் சங்கர், நகர அவைத்தலைவர் குணா, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் சாமிதுரை, துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ஆதி, ஊராட்சி தலைவர்கள் ஜெய்சங்கர், கலியன், சுப்பு இளங்கோவன், உஷாமுருகன், சின்னகண்ணு, ஆண்டி, அண்ணாமலை, துணைத்தலைவர் அசோகன், இளைஞரணி நிர்வாகிகள் மணி, பழனிசாமி, செந்தில்குமார், அப்துல்கபூர், முருகன், ஏழுமலை, முத்து, கண்ணதாசன், அரசு முதல்நிலை ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.