உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு இயக்கம்

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு இயக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து அவர், அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், வேலுமணி, நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை