குழந்தை தொழிலாளர்கள் அதிகம் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் புகார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வ ழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தங்கவேல், நுகர்வோர் அலுவலரின் நேர்முக உதவியாளர் வினோத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் குறித்து பே சியதாவது; மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதிகளில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க, இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் பல்வேறு ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட கலர் பவுடர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் அருண்கென்னடி, சுப்பிரமணியன், மணி, ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.