மேலும் செய்திகள்
இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி
03-Nov-2025
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கப் பணி, வாரச்சந்தை கட்டு மானப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் காமராஜர் பஸ் நிலையம் விரிவாக்க பணிகள் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.98 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. பஸ் ஓடுதளம், குடிநீர், மின் விளக்கு, பயணியர் காத்திருப்பு கூடம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, இலவச கழிப்பறை மற்றும் வணிக வளாக கடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். 40 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சின்ன சேலம் பேரூராட்சித் தலைவர் லாவண்யா ஜெய் கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
03-Nov-2025