உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

சின்னசேலம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

சின்னசேலம்: சின்னசேலத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி எல்லையம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து காத்தவராயன் ஆரியமாலா திருமணமும், பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். நேற்று காலை 10:30 மணிக்கு காளி கோட்டை இடித்தலும், மதியம் 1:30 மணிக்கு தேர்த்திருவிழா துவங்கியது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தேர் கடைவீதி, நாயக்கர்கள் வீதி, சிவன் கோவில் வீதி வழியாக சென்று சன்னதியை அடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை