உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச்சங்கத்தினர் எம்.எல்.ஏ.,விடம் மனு

கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச்சங்கத்தினர் எம்.எல்.ஏ.,விடம் மனு

ரிஷிவந்தியம் : வாணாபுரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச் சங்கத்தினர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.வாணாபுரத்தில் கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச்சங்கத்தினர், சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,விடம் அளித்த மனு:கடந்த 1989ம் ஆண்டு வன்னியர் சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ வன்னியர்கள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலேயே உள்ளனர். இதனால், அரசு பணி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் கிடைப்பதில்லை.எனவே வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அரசியலில் வன்னிய கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி