அரசு மகளிர் பள்ளியில் வகுப்பறை திறப்பு விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நேப்பால் தெரு வளாகத்தில் புதிதாக 3.3 கோடி ரூபாய் மதிப்பில் 15 வகுப்பறைகள், 2 ஆய்வகக் கூடங்கள் என கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் குத்துவிளக்கேற்றினார். தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார்.நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், கவுன்சிலர்கள் சீனிவாசன், மீனாட்சி கேசவன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, செயலாளர் கிரிராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி பங்கேற்றனர்.