உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவுநீர் கலப்பால் கூவம் நதியாக மாறி வரும் தென்பெண்ணையாறு

கழிவுநீர் கலப்பால் கூவம் நதியாக மாறி வரும் தென்பெண்ணையாறு

மூங்கில்துறைப்பட்டு:' மூங்கில்துறைப்பட்டில் தென் பெண்ணையாற்றில் கலக்கும் கழிவு நீரால் கூவ நதியாக மாறி வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சென்று கடலுாரில் கடலில் கலக்கிறது. இந்த தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் இருந்து சேகரமாகும் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கின்றன. அதேபோல் மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலுார், திருவெண்ணைநல்லுார் பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தென்பெண்ணயாற்றில் நேரடியாக கலக்கின்றன.பெண்ணை ஆற்றில் உள்ள நீரை ஆதாரமாக கொண்டு விவசாயிகள் விவசாய சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கழிவு நீர் கலப்பதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் கலப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. இதனால், பெண்ணையாறு கூவமாக மாறி வருகிறது.அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ