உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் கூட்டு வழிபாடு

சங்கராபுரத்தில் கூட்டு வழிபாடு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் உலக மக்கள் நலனிற்கு, கூட்டு வழிபாடு நடந்தது. ராமாயி எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், சங்கை தமிழ்ச்சங்க தலைவர் சுப்பராயன், இன்னர்வீல் கிளப் தலைவர் சுபாஷினி முன்னிலை வகித்தனர். கல்யாணி வரவேற்றார். ஆசிரியர்கள் செல்வம், இளையாப்பிள்ளை, முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அகவல் படிக்கப்பட்டு, உலக மக்கள் நலனிற்கு சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது. 'மாதா, பிதா' எனும் தலைப்பில் ஆசிரியர் லட்சுமிபதி; இல்வாழ்க்கை எனும் தலைப்பில் தீபா பேசினர். விருகாவூர் தமிழ்ச்சங்க தலைவர் சண்முகம் பிச்சப்பிள்ளை, ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், கோவில் நகர அரிமா சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், விஜயகுமார், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச்சங்க தலைவர் சவுந்தர்ராஜன், உரம் பூச்சி மருந்து சங்க தலைவர் கோவிந்தராஜ், சக்திவேல், இன்னர் வில் முன்னாள் தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சிற்றுண்டி வழங்கப்பட்டது.ராமநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி