உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு வைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு வைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் சிறப்பு சிகிச்சைக்கான தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த திறனாய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2024-25ம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள், குழந்தைகள் சிகிச்சை, டயாலிசிஸ் பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ரத்தம், நாய்கடி மற்றும் பாம்புக்கடி சிறப்பு சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை தேவையான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் டாக்டர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை