உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகளிர் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து கண்காணித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள், கடன் உதவிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. விடுப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்திட வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளை தொடர்ந்து கண்காணித்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனுதவி பெறுவதை மேம்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை