உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

புதிய அலுவலகம் கட்டும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139.41 கோடி ரூபாய் மதிப்பில் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கட்டுமானப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் முடிவுற்றுள்ள 8 தளங்கள், பூச்சு பணிகள், டைல்ஸ் பதித்தல் பணி, வர்ணப்பூச்சு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை தரமாக மேற்கொண்டு, விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செல்வகுமார், உதவி செயற் பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ெஷரிப் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை