உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த அணைக்கரைகோட்டாலம் இளையராஜா மகள் மேனகா,17; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற மேனகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி