மேலும் செய்திகள்
கூட்டுறவு கடன் சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
21-Jun-2025
கள்ளக்குறிச்சி; பணி ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், துணை பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சார்பதிவாளர் ரகு வரவேற்றார்.கள்ளக்குறிச்சி பொது விநியோக திட்ட துணை பதிவாளராக பணிபுரிந்த சுரேஷ், கடந்த 1985ம் ஆண்டு பணியில் சேர்ந்து 40 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்றதையொட்டி நடந்த விழாவில், சக ஊழியர்கள், கள்ளக்குறிச்சி சங்க நிர்வாகிகள் பங்கேற்று சுரேஷ் பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.சார் பதிவாளர்கள், முதுநிலை மற்றும் இளநிலை ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், விற்பனையாளர்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.கூட்டுறவு சார் பதிவாளர் சாந்தி நன்றி கூறினார்.
21-Jun-2025