புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
சாலை மேம்பாட்டு பணி மந்தம்
திருக்கோவிலுார், சந்தைபேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சாலை மேம்பாட்டு பணி மந்தகதியில் நடக்கிறது. செல்வம், திருக்கோவிலுார் பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவதி
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி முன்பு பயணிகள் நிழற்குடை இல்லாததால் கலெக்டர் அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம் போன்ற பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரசாந்த், கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் முளைப்பது தொடர்கதையாக உள்ளது. கண்ணன், திருக்கோவிலுார் அரசு கல்லுாரிக்கு பஸ் வசதி தேவை
திருக்கோவிலுார் அரசு கலை கல்லுாரிக்கு போதிய பஸ் வசதியின்மையால் மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.சிவராமன், தேவனுார்