மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி மரணம்
09-Mar-2025
நிழற்குடையின்றி அவதி கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சரவணன், ரோடுமாமந்துார்.சுகாதார சீர்கேடுகள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடத்தில் வீசும் பயங்கர துர்நாற்றத்தில் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ராமன், கள்ளக்குறிச்சி.வாகன ஓட்டிகள் அச்சம்கள்ளக்குறிச்சி - சின்னசேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மிகப்பெரிய பள்ளங்களால் விபத்து அபாயம் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். பிரதாப், இந்திலி.ஆக்கிரமிப்பு கள்ளக்குறிச்சி, அரசு மகப்பேறு பிரிவு மருத்துவமனையையொட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்கறி கடை வாகனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதியா, கள்ளக்குறிச்சி.நடவடிக்கை தேவை ரிஷிவந்தியத்தில் உள்ள வாரசந்தை கட்டடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காரவேலன், ரிஷிவந்தியம்.
09-Mar-2025