மேலும் செய்திகள்
கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
09-May-2025
கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவில்,10,ம் வகுப்பில், அபார சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவ மாணவியர், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 10,ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகளில், பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி சாதனை புரிந்துள்ளனர். இதில் மாணவர் மோகனேஷ் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 மதிப்பெண் எடுத்துள்ளார். அதேபோல் மாணவர் நவீன் 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து மாணவி பவ்யஸ்ரீ, தங்கதாரணி ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம், மாணவி சிபியா 490 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடம் பிடித்துள்ளார். இதில் கணிதம் பாடத்தில் 6 பேர், அறிவியல் 7 பேர், சமூக அறிவியல் ஒருவர் என மொத்தம் 14 பேர் 'சென்டம்' மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பள்ளியில் 490க்கு மேல் 5 பேர், 480க்கு மேல் 29 பேர், 470க்கு மேல் 65 பேர், 450க்கு மேல் 130 பேர், 400க்கு மேல் 234 பேர், 375க்கு மேல் 276 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் மாவட்ட அளவில் கல்வி சாதனை புரிந்த மாணவ மாணவியரை, பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-May-2025