உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையை, அவதுாராக பேசிய அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ்கண்ணன், வீரமுத்து, வட்டார தலைவர்கள் இளவரசன், சரண்ராஜ், மாவட்ட துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை கண்டித்து கோஷம் எழுப்பினர். காங்., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை