உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராகுல் கைது கண்டித்து காங்., மறியல்

ராகுல் கைது கண்டித்து காங்., மறியல்

சங்கராபுரம்: ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து சங்கராபுரத்தில் காங்., கட்சியினர் சாலை மறியல் செய்தனர். டில்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற காங்., முன்னாள் தலைவர் ராகுல் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து சங்கராபுரத்தில் காங்., கட்சி சார்பில் கடைவீதி மும்முனை சந்திப்பில் சாலை மறியல் நடந்தது. மாவட்ட துணை தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். மாலை 5:00 மணி முதல் 5.10 மணி வரை மறியல் செய்து தொடர்ந்து, சாலையோரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடி விலக வேண்டும், அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !