உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சி காந்தி ரோடில் புதிய கால்வாய் அமைக்கும் பணி

 கள்ளக்குறிச்சி காந்தி ரோடில் புதிய கால்வாய் அமைக்கும் பணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்தி ரோடில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றிய இடத்தில் தற்போது புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி காந்தி ரோடு வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. நகரின் முக்கிய பிரதான சாலையான காந்தி ரோடில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததது. சாலையோரம் இருந்த கழிவு நீர் வாய்க்கால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் இருந்து காந்தி சாலை வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து தனி நபர்கள் கட்டடங்களை கட்டியிருந்தனர். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரிமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனையடுத்து ஆக்கிரமிப்பு கட்டங்களை அகற்றிய இடத்தில் தற்போது புதியதாக ஏரியின் கால்வாய் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை