உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கட்டட தொழிலாளி போக்சோவில் கைது

 கட்டட தொழிலாளி போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கட்டட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் வெற்றிவேல், 26; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற 14 வயது சிறுமியை வழிமறித்து கையை பிடித்து இழுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வெற்றிவேல் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை