உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்ததுகலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராஜி, மாவட்ட துணை தலைவர் அந்தோணிசாமி, மாவட்ட பொருளாளர் தாமோதரன், மாவட்ட நிர்வாகக்குழு ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி., மாநில நிர்வாகக்குழு வளர்மதி, மாவட்ட துணை தலைவர் அப்பாவு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாநிலக்குழு ஆண்டாள், நிர்வாகிகள் கனி, செல்வராஜ், அழகிரி, சின்னய்யன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கங்களை முறையாக செயல்படுத்த வேண்டும்.ஐ.நா., சபை உலக தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதல்படி, கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முனுசாமி, மாதய்யன், குமார், மணிகண்டன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ