மேலும் செய்திகள்
கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை
09-Nov-2024
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அரசு செயலர் தலமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.வெள்ளிமலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.கல்வராயன்மலை பகுதியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளாண், கூட்டுறவு, ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை போன்ற பல்வேறு துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் சார்ந்து துறை வாரியாக அதிகாரிகளுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, பொருளாதார முன்னேற்றம் குறித்தும் கேட்டறியப்பட்டது. கல்வராயன்மலை பகுதியில் விவசாய பரப்பை அதிகரிக்கவும், வேளாண் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக சென்றடைய மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் அளவில் தொடர்புடைய அதிகாரிகள் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
09-Nov-2024